Skip to main content

கொரோனா வைரஸ் நோய்-19 (COVID-19) பற்றி ராயல் கமிஷனின் பதிவு

கொரோனா வைரஸ் நோய்-19 (COVID-19) பற்றி ராயல் கமிஷனின் பதிவு

வன்முறை, முறைகேடு, புறக்கணிப்பு மற்றும் ஊனமுற்றோரைச் சுரண்டல் போன்றவற்றுக்கான அரச ஆணையம் (ராயல் கமிஷன்) COVID-19 கொரோனா வைரஸ் பரவுவது பற்றிய கவலைகள் காரணமாக அனைத்து பொது நிகழ்வுகளையும் அடுத்த அறிவிப்பு வரும்வரை நிறுத்திவைத்துள்ளது.       

பின்வரும் பொதுக் கேட்புரைகள் இதில் அடங்கும்:

  • குயின்ஸ்லாந்தின் பிரி்ஸ்பனில் அடுத்த வாரம் திட்டமிடப்பட்டுள்ள கல்வி பற்றியது,  
  • குயின்ஸ்லாந்தின் பிரி்ஸ்பனில் ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்டுள்ள நீதி பற்றியது,  
  • வடக்கு பிரதேசத்தின் ஆலிஸ் ஸ்பிரிங்கில் மே மாதம் திட்டமிடப்பட்டுள்ள முதல் நாடுகள் ஊனமுற்றோர் பற்றியது.

உடல்நலம் பற்றிய அபாயங்களின் பொருட்டு, குறிப்பாக ஊனமுற்றோருக்கு இத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகும்.

வன்முறை, முறைகேடு, புறக்கணிப்பு மற்றும் ஊனமுற்றோரைச் சுரண்டல் பற்றிய அனுபவங்களை மக்கள் தொடர்ந்து எங்களிடம் கூறலாம். அவர்கள் இதைத் தொலைபேசி மூலமாகவோ, எழுத்து மூலமாகவோ அல்லது ஒலிப்பதிவு அல்லது ஒளிப்பதிவு செய்வதன் மூலமாகவோ செய்யலாம்.

எங்கள் இணையதளம், செய்திமடல் மற்றும் சமூக ஊடக சேனல்களில் புதியதான தகவல்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்.